உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேணுகோபால சாமி கோவில் கும்பாபிஷேக விழா!

வேணுகோபால சாமி கோவில் கும்பாபிஷேக விழா!

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வேணுகோபால சாமி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விக்கிரவாண்டி கடைவீதியில் உள்ள வேணுகோபால சாமி கோவிலில் விமானம், ராஜகோபுரம், முகப்புசுதை பிம்பங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன் கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம்  மாலை கணபதி ஹோமம் நடந்தது. நேற்று காலை 9:30 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்து, கடம் புறப்பாடு நடந்தது.  காலை 9:  45 மணிக்கு, வேணுகோபாலசாமி ராஜகோபுர கலசத்திற்கு, பெரும்பாக்கம் ஸ்ரீதரன் பட்டாச்சாரியார் புனிதநீர் ஊற்றினார். மாலை 4 :00 மணிக்கு நடந்த உறியடி உற்சவத்தினை, இந்தியன் வங்கி பொதுமேலாளர் கோபால கிருஷ்ணன் துவக்கி வைத்தார். இரவு 7:00 மணிக்கு பகவான் கிருஷ்ணர்  சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !