ஆரோக்கிய அன்னை தேர்பவனி விழா
ADDED :3719 days ago
சேலம்: ஆரோக்கிய அன்னை சிற்றாலயத்தின், தேர்பவனி விழா, வெகுவிமர்சையாக நேற்று நடந்தது. தூய ஆரோக்கிய அன்னை சிற்றாலயம், நான்கு ரோடு குழந்தையேசு பேராலயத்தின் கட்டுப்பாட்டில், சகாதேவபுரத்தில் செயல்பட்டு வருகிறது. ஆலயத்தின், 32ம் ஆண்டு பெருவிழா, கடந்த, ஆகஸ்ட், 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நாளான தேர்பவனி விழா நேற்று நடந்தது. இதில், சேலம் மறை மாவட்ட பேராயர் சிங்கராயன் தலைமையில், சிறப்பு ஆராதனை, தேர்பவனி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில், மாதா ஊர்வலமாக சாமிநாதபுரத்தின் முக்கிய வழிகளில் சென்று, மீண்டும் சாமிநாதபுரத்தை அடைந்தது. இந்தவிழாவில், பேராலயத்தின் பங்கு தந்தை கிரிகோரிராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.