உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதி அம்மன் கோவில் தேரோட்டம்

திரவுபதி அம்மன் கோவில் தேரோட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூரில் உள்ள தர்மராஜா, திரவுபதி அம்மன் கோவில் தேரோட்டம், நேற்று, நடந்தது. கடந்த, 30ம் தேதி குடியழைத்தல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பால்குடம், பொங்கல், மாவிளக்கு பூஜை, திருக்கல்யாணம், கிருஷ்ணர் தூது விழா, ஸ்வாமி புறப்பாடு, மிதித்தல் நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை, நேற்று, கலெக்டர் தரேஷ்அஹமது, வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, அரும்பாவூர் கிராமத்தின் பிரதான வீதிகள் வழியே இழுத்து செல்லப்பட்ட தேர், மாலையில் நிலைக்கு வந்தடைந்தது. விழா, இன்று நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !