உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூரில் பச்சை சாத்தி கோலத்தில் சண்முகர் வீதி உலா!

திருச்செந்தூரில் பச்சை சாத்தி கோலத்தில் சண்முகர் வீதி உலா!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழாவில் நேற்று சுவாமி பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி  திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று, அதிகாலை 5  மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விசுவரூப தீபாராதனை,  மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ப ந்தல் மண்டபத்தில் பச்சை சாத்தி மண்டபத்திற்கு வந்த சுவாமி, பச்சை நிற பட்டு உடுத்தி, பச்சை நிற மலர்கள் சூடி,  பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் வள்ளி, தெய்வானையிடன் உலா வந்து பக்தர்களுக்கு அ ருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !