திருவள்ளூர் தட்சிணாமூர்த்தி கோவிலில் 108 லிட்டர் பாலபிஷேகம்!
ADDED :3720 days ago
திருவள்ளூர்: திருவள்ளூர் யோக ஞான தட்சிணமூர்த்தி கோவிலில், 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. திருவள்ளூர் அடுத்த பூங்கா நகரில் யோகஞான தட்சிணாமூர்த்தி பீடம் உள்ளது. இங்கு, ஆறடி உயரத்தில் யோக ஞான தட்சிணாமூர்த்தியும், அவருக்கு எதிரில் சனீஸ்வர பகவானும் எழுந்தருளி உள்ளனர். இக்கோவிலில் வியாழக்கிழமை தோறும் யோக ஞான தட்சிணாமூர்த்திக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடைபெறுகிறது. வியாழக்கிழமையான இன்று(செப்.10) காலை, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதி்ல, திருவள்ளூர், காக்களூர், பூங்கா நகர் மற்றும் சுற்றியுள்ள பக்தர்கள் கலந்து கொண்டு தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்து வழிபட்டனர்.