திருப்பூர் ஐயப்பன் கோவில் நிர்வாகிகள் 27ல் தேர்வு!
திருப்பூர்: திருப்பூர் ஐயப்பன் கோவிலுக்கு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான குலுக்கல், 27ல் நடக்கிறது; விருப்ப மனுக்கள், 23ல் பெறப்படுகிறது. திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள ஐயப்பன் கோவில், ஸ்ரீஐயப்ப பக்த ஜன சங்கம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. 500 உறுப்பினர்கள் உள்ளனர்; மூன்று ஆண்டுக்கு ஒருமுறை, தேர்தல் நடத்தப்பட்டு, நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர். தற்போதைய நிர்வாகிகள் பதவிக்காலம், வரும், 30ல் முடிகிறது. இதையடுத்து, வரும் 27ல் குழுக்கல் முறையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது; தேர்தல் அதிகாரியாக, வக்கீல் சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். தலைவர், துணை தலைவர், பொது செயலாளர், இணை செயலாளர், பொருளா ளர் மற்றும், 23 நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் என, 28 பதவிகளுக்கு, தேர்தல் நடைபெற உள்ளது.
விருப்ப மனுக்கள், 23 முதல், 25 வரை வழங்கப்படும். 25ம் தேதி காலை, 9:00 முதல்,1:00 மணி வரை மனுக்கள் பெறுதல்; பிற்பகல், 3:00 முதல் இரவு, 8:15 வரை, மனுக்கள் பரிசீலனை நடைபெறும். வேட்பாளர் பட்டியல், 26ல் வெளியாகும். அதே நாளில், மனுக்கள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்; மாலை, 6:15க்கு, இறுதி பட்டியல் வெளியிடப்படும். 27ம் தேதி, காலை, 10:30க்கு, ஆண்டு மகா சபை கூட்டமும், மதியம், 2:00க்கு, புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான குலுக்கல் நடைபெறும். விருப்ப மனு தாக்கல் செய்ய, அடையாள அட்டை நகலுடன், ஒருவர் ஒரு பதவிக்கு விண் ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.