உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் தீமிதி விழா நாளை துவக்கம்

சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் தீமிதி விழா நாளை துவக்கம்

சிதம்பரம் : சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் தீமிதி விழா நாளை 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதனைத் தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜை, தீபாராதனைகள் நடக்கிறது. வரும் 26ம் தேதி தெருவடைச்சானும், 31ம் தேதி காலை தேர் திருவிழாவும் நடக்கிறது. அன்று இரவு காத்தவராய சுவாமி கழுவேறும் நிகழ்ச்சி நடக்கிறது.ஆகஸ்ட் 1ம் தேதி தீ மிதி உற்சவம் நடக்கிறது. அன்று காலை 5 மணி முதல் அங்கபிரதட்சணம், அலகு போடுதல், பால்காவடி, பாடை பிரார்த்தனைகளும், காலை 9 மணிக்கு மேல் தீ மிதிப்பவர்களுக்கு காப்பு கட்டுதல் காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் சோதனை கரகம், அலகு தரிசனம் பகல் 1 மணிக்கு மேல் 2 மணிக்குள் அக்கினி சட்டி எடுத்தல், மாலை 4.30 மணிக்கு தீ மிதி திருவிழாவும், இரவு 9 மணிக்கு அம்பாள் வீதியுலாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !