உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாலம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

முத்தாலம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

கடலூர் : கடலூர், தேவனாம்பட்டிணம் முத்தாலம்மன் கோவில் செடல் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடந்தது.கடலூர், தேவனாம்பட்டிணத்தில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் நாளை செடல் திருவிழா நடக்கிறது. அதனையொட்டி நேற்று முன்தினம் மாலை பெண்கள் ஊர்வலமாக கொண்டு வந்த 108 குட பால் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.நேற்று காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இன்று மாலை 3 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும், இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. நாளை காலை 9 மணிக்கு கரகம் வீதியுலாவும், 12 மணிக்கு சாகை வார்த்தலும், 3 மணிக்கு செடல் உற்சவமும், இரவு 9 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !