உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம்

ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம்

உடுமலை : உடுமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் ஜெயந்தி உற்சவ விழாவில், உறியடி உற்சவம் நடந்தது. உடுமலை, பெரியகடை வீதியில் பூமிநீளா நாயகி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி, ஜெயந்தி உற்சவ விழா நடக்கிறது. இந்தாண்டு, கடந்த, 6ம் தேதி விழா துவங்கி நடந்து வருகிறது. தினமும், சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் செய்யப்படுகின்றன. மாலை, 4:00 மணிக்கு சுவாமி சந்தான கோபால கிருஷ்ணன், தவழும் கண்ணன், வெண்மைத்தாழி கண்ணன், ஸ்ரீவித்யா ராஜகோபாலன், காளிங்க நர்த்தன கண்ணன், கோவர்த்தனகிரி கண்ணன் மற்றும் புன்னை மரக்கண்ணன் அலங்காரங்களில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்; நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் உறியடி உற்சவம் நடந்தது; ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் இன்று, தெப்போற்சவமும், நாளை திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !