ரத்னகர்ப்ப கணபதி கோயிலில் தேர் வெள்ளோட்டம்!
ADDED :3691 days ago
சிவகங்கை: சிவகங்கை கோகலேஹால் தெருவில் சிருங்கேரி மடத்திற்குட்பட்ட ரத்னகர்ப்ப கணபதி கோயிலில், சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல் வேறு பூஜைகள் செய்யப்பட உள்ளன. முன்னதாக கோயிலுக்கு உபயதாரர்கள் வழங்கிய நிதியில் சிறுதேர் செய்யப்பட்டது. இதற்கான வெள்÷ ளாட்ட நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு கோயிலில் விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, இந்திராதி அஷ்டதிக் ஹோமம், வாஸ்து ஹோமம் பூஜைகள் நடந்தன.தொடர்ந்து 10:30 மணிக்கு, மூஷிக வாகனத்தில் சிறு தேரில் விநாயகர் எழுந்தருளினார். காலை 10:30 மணிக்கு கோயில் உட்பிரகாரத்திற்குள் சிறுதேர் வெள்ளோட்டம் நடந்தது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சிருங்கேரி மட மேலாளர் ஆர்.எஸ்., ஜானகிராமன் ஏற்பாடுகளை செய்தார்.