கோயம்புத்தூர் யோக விநாயகர் கோயிலில் முப்பெரும் விழா!
கோயம்புத்தூர்: குனியமுத்தூர், இடையர்பாளையம், (நிர்மலா மாதா பள்ளி எதிரில்), சன் கார்டனில் அமைந்துள்ள யோக விநாயகர் திருக்கோயிலில், கும்பாபிஷேக ஆறாம் ஆண்டு துவக்க அஷ்டோத்ரசத (108) சங்காபிஷேகம், 108 பால்குட அபிஷேகம், விநாயகர் சதுர்த்தி ஆகிய முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.
வருகிற 15.9.2015 செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல், உலகிலேயே முதன் முதலாக மூலவராக யோக நிலையில் அமர்ந்து, தன்னை அன்போடு நாடி வரும் பக்தர்களுக்கெல்லாம் வேண்டும் அஷ்ட யோகங்களையும் அள்ளி வழங்கும் யோக விநாயகர் கோயில் கும்பாபிஷேக 6-ம் ஆண்டு துவக்க அஷ்டடோத்ரசத் (108) சங்காபிஷேக விழா 16.9.2015 காலை 7.00 மணி முதல் யோகவிநாயகப் பெருமானுக்கு பக்தர்கள் தங்கள் திருக்கரங்களால் 108 பால்குட அபிஷேக விழா மற்றும் 17.9.2015 வியாழக்கிழமை காலை 5.00 மணி முதல் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவிலும் தவறாமல் கலந்து கொண்டு எல்லாம் வல்ல ஸ்ரீயோக விநாயகரின் இஷ்ட சித்திகளைப் பெற கோயில் நிர்வாகம் பக்தர்களை அழைக்கிறது.
நிகழ்ச்சி நிரல்:
15.9.2015 (செவ்வாய்க்கிழமை) கும்பாபிஷேக ஆறாம் ஆண்டு துவக்க அஷ்டடோத்ரசத (108) சங்காபிஷேக விழா
காலை: 6.00 மணி- மங்கள வாத்திய இசை
காலை: 7.00 மணி முதல்- சங்கல்பம், விநாயகர் வழிபாடு, ஸ்ரீலக்ஷ்மி குபேர மஹாசக்தி வேள்வி, பூர்ணாகுதி, ஸ்ரீயோக விநாயகர், ஸ்ரீவிஷ்ணு துர்கை, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீபிரம்மா மற்றும் நாகதேவதை தெய்வங்களுக்கு விசேஷ திரவியாபிஷேகங்கள்.
16.9.2015 (புதன்கிழமை) 108 பால்குட அபிஷேக விழா
காலை: 7.00 மணி- ஸ்ரீயோக விநாயகப் பெருமானுக்கு பக்தர்கள் தங்கள் திருக்கரங்களால் 108 பால்குட அபிஷேகம் சிறப்பு அலங்கார பூஜை வழிபாடு
ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி விழா:
காலை: 5.00 மணி- மஹா கணபதி ஹோமம்
காலை: 6.30 மணி- மஹா திரவியாபிஷேகம்
காலை: 7.00 மணி- சிறப்பு அலங்கார பூஜை
காலை: 11.00 மணி- மஹா திரவியா அபிஷேகம்
நண்பகல்: 11.30 மணி-உச்சிகால பூஜை
மாலை: 4.00 மணி முதல்- ஸ்ரீயோக விநாயகர் திருவீதி உலா
மாலை: 7.00 மணி- மஹா திரவியா அபிஷேகம், சாயரட்சை தொடர்ந்து இரவு 9.00 மணி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.