உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திறந்த வெளியில் 11 விநாயகர்!

திறந்த வெளியில் 11 விநாயகர்!

வேலூர் சேண்பாக்கத்தில் 11 விநாயகர்களைக் கொண்ட திறந்தவெளி விநாயகர் சபை உள்ளது. துக்கோஜிராவ் என்ற மராட்டிய மன்னரின் அமைச்சர் வேலூர் கோட்டையை செப்பனிட வண்டியில் கற்களை ஏற்றிச் சென்றார். அந்த வண்டி தன் முதுகில் ஏறி ரத்தம் வழிவதாக ஒரு அந்தணச்சிறுவன் மக்களிடம் புகார் செய்தான். இந்த விஷயம் அமைச்சருக்கு தெரிந்ததும் பதறிப்போய் ஓடி வந்தார். ஆனால், சிறுவனைக் காணவில்லை. அந்த இடத்தில் ஆறு விநாயகர் உருவங்கள் இருந்தன. அதில் ஒரு உருவத்தில் இருந்து ரத்தம் வழிந்தது. இது விநாயகரின் திருவிளையாடல் என்பதை உணர்ந்த அமைச்சர், அந்த திறந்த வெளியிலேயே 11 விநாயகர்களை அமைத்தார். தேவர்களும், முனிவர்களும் விண்வெளியில் இருந்தபடியே இவர்களை வணங்குவதாக ஐதீகம். இருப்பிடம்: வேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூரு சாலையில் 3 கி.மீ.அலைபேசி: 94434 19001, தொலைபேசி: 0416  229 0182.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !