ராமானுஜ பஜனை மடத்தில் திருமால் கருட சேவை
ADDED :3786 days ago
புதுச்சேரி: முருங்கப்பாக்கம் சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனை மடத்தில் வரும் 19ம் தேதி திருமால் கருட சேவை நடக்கிறது. முருங்கப்பாக்கம் பள்ளத்தெருவில் உள்ள சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனை மடத்தில் புரட்டாசி திருவிழாவாக முதல் சனிக்கிழமையான வரும் 19ம் தேதி திருமால் கருட சேவை நடக்கிறது. அன்று காலை 7.00 மணிக்கு திருமாலுக்கு திருமஞ்சனம், மாலை 6.00௦௦ மணிக்கு சர்வ அலங்காரத்துடன் வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை உபயதாரர் மகாகணபதி ஆச்சாரி, கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.