விநாயகர் என்பதன் பொருள்!
ADDED :3682 days ago
வி என்றால் இதற்கு மேல் இல்லை எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட கணபதிக்கு விநாயகர் என பெயர் சூட்டப்பட்டது. விநாயகருக்கு அர்ச்சிக்கும் போது ஓம் அநீஸ்வராய நம என்பர். அநீஸ்வராய என்றால் இவருக்கு மேல் ஒரு ஈஸ்வரன் இல்லை எனப் பொருள். ஆதிசங்கரர் கணேச பஞ்சரத்தினம் என்ற நுõலை இயற்றினார். அதில் விநாயகரை அநாயக ஏக நாயகம் எனச் சொல்கிறார். இதற்கு தனக்கு மேல் ஒரு தலைவர் இல்லாமல் ஒரே மூலப்பொருளாக இருப்பவர் எனப் பொருள். பூத கணங்களுக்கு தலைவர் என்பதால் கணபதி என்றும், பாவவினைகளைத் தீர்ப்பவர் என்பதால் விக்னேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.