வீரசத்தி விநாயகர் தங்ககவசத்தில் பக்தர்களுக்கு காட்சி!
காரைக்கால்: காரைக்கால் வீரசத்தி விநாயகர் கோவில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தங்ககவசத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். காரைக்கால் பாரதியார் சாலையில் வடமறைக்காடு வீரசத்தி விநாயகர் கோவில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலை கணபதி ஹோமம் அதனைத் தொடர்ந்து பல திரவங்களால் மஹா அபிஷேகம் நடைபெற்றது.பின் வீரசத்தி விநாயகருக்கு கொழுக்கட்டை,சுன்டல் உள்ளிட்ட பொருட்களை கொண்டு படையல் செய்யப்பட்டு மூலவர் விநாயகருக்கு தங்க கவசத்தில் பத்தர்களுக்கு காட்சி அளித்தார்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய பரம்பரை தர்மகர்த்தா இளங்கோவன்,ஆலய தலைவர் சிவக்குமார்,ஆலய அர்ச்சகர் குருமூர்த்தி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தானர்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் திருநள்ளார் நளம்குளம் அருகில் உள்ள நளன் கலிதீர்த்த விநாயகர் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இதுப்போல் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் காட்சி அளித்தார்.