உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சதுர்த்தி விழா: 1,041 இடங்களில் வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழா: 1,041 இடங்களில் வழிபாடு

தர்மபுரி: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில், 1,041 இடங்களில், நேற்று விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.

தர்மபுரி மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி என, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், 1,041 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்தனர். நேற்று அதிகாலை, 5 மணிக்கு, பல்வேறு பூஜைகளுக்கு பின், விநாயகருக்கு கண் திறக்கப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில், அன்னதானம் வழங்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில், வைக்கப்பட்டுள்ள அனைத்து விநாயகர் சிலைகளையும், பக்தர்கள், வரும், 19 மற்றும் 21ம் தேதிக்குள் விசர்ஜனம் செய்ய போலீஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சிலைகள் வைத்துள்ள நாட்களில், பகல் மற்றும் இரவு நேரங்களில், சிலை வைத்து வழிபடுபவர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட, போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். விசர்ஜனம் செய்ய சிலைகளை எடுத்து செல்லும் போது, அமைதியான முறையிலும், போலீஸாரின் அறிவுரை படி எடுத்து செல்ல வேண்டும் என, போலீஸார் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !