கடினமான ஸ்லோகங்களை படிக்கும் போது தவறாக உச்சரித்தால் தீங்கு நேருமா?
ADDED :3771 days ago
அன்பே கடவுள் என்பது தான் பக்தியின் அடிப்படை. இஷ்டதெய்வ வழிபாட்டில் கடவுளை தாயாக பாவித்து வழிபடுவது சிறப்பானது. பேசக் கற்கும் குழந்தையின் மழலை மொழியை தாய் ரசித்து ஆனந்தம் கொள்வாள். தாயைப் போல கடவுளும் அன்பினால் நம்முடைய குறைகளையும் நிறைகளாக ஏற்றுக் கொள்வார். இயன்றவரை சரியாக உச்சரிக்க முயலுங்கள். அதற்காக தீங்கு நேரும் என்ற பயம் கொள்ளத் தேவையில்லை.