சென்னை விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு!
ADDED :3669 days ago
சென்னை: சென்னை முழுவதும், 2,300 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகின்றன.
அந்த சிலைகளை, 20ம் தேதியில் இருந்து 23ம் தேதி வரை ஊர்வலமாக எடுத்து சென்று, கடலில் கரைக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர். அதற்காக, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு, எண்ணுார், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர். ராட்சத கிரேன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன; கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.