அவலூர்பேட்டை விநாயகர் சதுர்த்தி விழா!
ADDED :3670 days ago
அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை பகுதியில் 90 இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.
மேல்மலையனூர் ஒன்றியம் அவலூர்பேட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முருங்கை மரத்தெருவில் நவதானியங்களை கொண்டு, நவகிரகங்களை போல் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, சிறப்பு வழிபாடு செய்தனர்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் கலாராஜவேலாயுதம், தமிழ் சங்க தலைவர் புருஷோத்தமன், ஏழுமலை, சரவணன், சிவநேசன், செல்வராஜ், அண்ணாமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரிய தெரு, முருங்கை மரத்தெரு, வாணியர் தெரு, காலனி உள்ளிட்ட 21 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதே போல் சுற்றுப்பகுதியை சேர்ந்த கிராமங்களில் 69 இடங்களிலும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு தீபாராதனையுடன் சிறப்பு வழிபாடு நடந்தது. கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.