உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கம் கோவிலில் தொடர் சேவை!

புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கம் கோவிலில் தொடர் சேவை!

திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில்
நம்பெருமாள், தாயார், மற்றும் சக்கரத்தாழ்வார் சன்னதிகளில், மூலஸ்தான சேவை நடைபெறும்.

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், பெருமாளை தரிசனம் செய்வது,
திவ்யதேச பெருமாள் அனைவரையும் வழிபட்டதற்கு சமம் என்பது ஐதீகம். அதன்படி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், நம்பெருமாள், தாயார் மற்றும் சக்கரத்தாழ்வார் ஆகிய சன்னதிகளில், காலை, 6 மணி முதல், மாலை, 5.30 மணி வரை
தொடர்ந்து மூலஸ்தான சேவை நடைபெறும். அதே போல், புரட்டாசி சனிக்கிழமைகளில் தொடர் சேவை நடைபெறுவதால், விஸ்வரூப சேவை கிடையாது.

மூலஸ்தான சேவை ரத்து: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், 43 உபசன்னதிகள், 11
கோபுரங்களுக்கு, கடந்த, 9ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இரண்டாம் கட்ட கும்பாபிஷேகம்,
வரும் நவம்பர் மாதத்தில் நடத்துவதற்காக, திருப்பணி வேலை நடந்து வருகிறது. இதையொட்டி, மூலவர் பெருமாள் எழுந்தருளியுள்ள தங்கக்கோபுரம், கருடாழ்வார் சன்னதிக்கு கும்பாபிஷேகம் செய்வதற்காக, 18.9.15 முன்தினம் பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணி துவங்கப்பட்டுள்ளது.

மூலஸ்தானத்தில் ஜெயவிஜய துவார பாலகர், கருடன் சிலை, பெரிய கருடன் சன்னதி பழமை
மாறாமல் புனரமைக்கப்படுகிறது. திருப்பணி முடியும் வரை, பெரிய பெருமாள் மூலஸ்தான
சேவை கிடையாது. அதே நேரத்தில், உற்சவர் நம்பெருமாள், மூலஸ்தானத்தில் மேற்குபுறம் உள்ள யாகசாலையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இத்தகவலை, கோவில் இணைஆணையர் ஜெயராமன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !