திருமலை பிரம்மோற்சவம் நான்காம் நாளில்..
ADDED :3666 days ago
திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான (19/09/15)கேட்பவர்க்கு கேட்டவரம்தரம் கற்பகவிருட்ச அலங்காரத்தில் தேவியர் சமேதரராய் மலையப்பசுவாமி மாடவீதிகளில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சுவாமி வலம்வரும் பாதையில் மகராஷ்ட்ரா மாநிலத்தில் இருந்து வந்திருந்த பக்தர்கள் பெரிய ட்ரம் போன்ற வாத்தியக்கருவியை இசைத்து பார்வையாளர்களை ஈர்த்தனர்.அதே போல சிறுவர்களின் லாட்டமும்,பெண்களில் நாட்டியமும்,ஆதிசேஷன் மீதிருந்து பாலகிருஷ்ணன் ஆடுவது போன்ற நடனமும் நன்றாக இருந்தது. பார்வையாளர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது ராஜகோபுரமான வெள்ளை கோபுரம் முன் அதிகளவில் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷமிட்டு பரவசமடைந்தனர்.
-எல்.முருகராஜ்.