உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரூர் பட்டீஸ்வரர் கோவில் நாட்டியாஞ்சலி நிறைவு

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் நாட்டியாஞ்சலி நிறைவு

பேரூர்: கோவை பேரூரில் நடந்து வந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நேற்று நிறைவடைந்தது. கோவையில் பழமையான கோவில்களில் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலும் ஒன்று. மேலை சிதரம்பரம் என்று அழைக்கப்படும் பேரூர் கோவிலில், புகழ்பெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி, கடந்த, 18ம் தேதி துவங்கியது. நிறைவு நாளான நேற்று, கோவை அர்ச்சனா சாஸ்த்ரா டெம்பிள் ஆப் டான்ஸ் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, புவனேஸ்வரை சேர்ந்த இலியானா ஹிட்டாரிஸ்ட் குழுவினரின் ’ஒடிசி மற்றும் ச்சாவ்’ நடன நிகழ்ச்சி நடந்தது. சென்னையை சேர்ந்த கவிதா ராமுஸ் லஸ்ய கவ்தா டான்ஸ் பள்ளி நடனக் கலைஞர்கள் ’அஞ்சலி’ எனும் கருத்தை வெளிப்படுத்தி நடனமாடினர். மூன்று நாள் நாட்டியாஞ்சலி, நேற்று நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !