உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ண ப்ரேமிக பஜனை மண்டலி உஞ்சவ்ருத்தி நாம சங்கீர்த்தனம்

கிருஷ்ண ப்ரேமிக பஜனை மண்டலி உஞ்சவ்ருத்தி நாம சங்கீர்த்தனம்

புதுச்சேரி: கிருஷ்ண ப்ரேமிக பஜனை மண்டலி சார்பில் 4 இடங்களில் உஞ்சவ்ருத்தி நாம சங்கீர்த்தனம் நடந்தது. கும்பகோணம் அருகில் உள்ள கோவிந்தபுரத்தில் ஜீவசமாதி அடைந்த காஞ்சி காமகோடி பீடத்தின் 59வது பீடாதிபதி பகவந்நாம போதேந்திர சரஸ்வதி சுவாமியின் 323வது ஆராதனை விழா, வரும் 27ம் தேதி முதல் அக்டோபர் 10ம் தேதி வரை கோவிந்தபுரம் மடத்தில் நடக்கிறது. உற்சவத்திற்காக, மடத்தின் பாகவதர்களால் உஞ்சவ்ருத்தி நாம சங்கீர்த்தனம் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் கிருஷ்ண ப்ரேமிக பஜனை மண்டலி சார்பில், நேற்று 4 இடங்களில் நாம சங்கீர்த்தனம் நடந்தது. ரெயின்போ நகர் சுமுக விநாயகர் கோவில், பிருந்தாவனம் சதானந்த விநாயகர் கோவில், லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் வலம்புரி ஞான விநாயகர் கோவில், எல்லைப்பிள்ளைச்சாவடி சாரதாம்பாள் கோவில் ஆகிய இடங்களில் உஞ்சவ்ருத்தி நாம சங்கீர்த்தனம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !