காங்கேயநத்தம் ஊராட்சி சார்பில் சதுர்த்தி விழா
ADDED :3669 days ago
திருமங்கலம் : திருமங்கலம் அருகே காங்கேயநத்தம் ஊராட்சி சார்பில் 5ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.ஐந்தடி சிலைக்கு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. பின் சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கண்மாயில் கரைக்கப்பட்டது. விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் சவுந்திரபாண்டியன் செய்திருந்தார்.