செங்குடி மிக்கேல் அதிதூதர் ஆலய விழா
ADDED :3668 days ago
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள செங்குடி தூய மிக்கேல் அதிதூதர் ஆலய விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக ஆலயத்தில் இருந்து மிக்கேல் அதிதூதர் படம் பொறிக்கபட்ட கொடியை செங்குடி பங்கு பாதிரியார் சாமுஇதயன் ஏற்றிவைத்து விழாவை துவங்கி வைத்தார். தினமும் ஜெபமாலை, நவநாள் திருப்பலி நடக்கிறது. விழாவாவின் முக்கிய நிகழ்ச்சியாக செப்.,28 இரவு தேர்பவனி நடக்கிறது. 29ல் திருவிழா கூட்டு திருப்பலியுடன் விழா நிறைவடைகிறது.கொடியேற்ற விழாவில் செங்குடி கிராம தலைவர் சேவியர், செயலாளர் ஆரோக்கிய மோரீஸ், பொருளாளர் சேவியர், பாதிரியார்கள் ஜெரால்டு ஜோசப், சிரில், ஆரோக்கியராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.