உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நரசிம்மர் கோவிலில் 43 ஆண்டுகளுக்கு பின் கருட சேவை!

லட்சுமி நரசிம்மர் கோவிலில் 43 ஆண்டுகளுக்கு பின் கருட சேவை!

திருவண்ணாமலை: பெரணமல்லூர் அடுத்த, அவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் கடந்த, 16ம் தேதி, கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு, ஸ்ரீதேவி,பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கேடய உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று, ஸ்வாமி திருக்கல்யாணமும், தொடர்ந்து, ஸ்ரீதேவி,பூதேவி ஸ்ரீநிவாச பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா நடந்தது. கோவிலின் சன்னதியில்உள்ள கொடிமரம் கடந்த, 43 ஆண்டுகளுக்கு முன் நடந்த திருவிழாவில் பட்டாசு வெடித்தபோது தீக்கிரையானது. இதையடுத்து, புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழா நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு புதியதாக கொடிமரம் நிறுவப்பட்டதை தொடர்ந்து, இந்தாண்டு பிரம்மோற்சவ விழா மற்றும் கருட சேவை நடந்ததால், ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !