மகாதேவி ரேணுகாம்பாள் கோவிலில் 1,008 கலச யாக பூஜை
ADDED :3782 days ago
வேலூர்: வேலூர் சூளைமேடு, மகாதேவி ரேணுகாம்பாள் கோவிலில், 25ம் ஆண்டு வெள்ளிவிழாவையொட்டி, வரும், 25ம் தேதி காலை, 7. 30 மணிக்கு, கோ பூஜை, கணபதி ?ஹாமம் நடக்கிறது. மாலை, 6.30 மணிக்கு, 1,008 கலச யாக பூஜையை தங்கால் ஞான குருமரன் பிரசன்ன வெங்கடேஷ் ஸ்வாமிகள் தொடங்கி வைக்கிறார். மாலை, 7.30 மணிக்கு பிரம்ம பிரவாகம் சிறப்பு மலர் வெளியீட்டு விழா, கலெக்டர் நந்தகோபால் தலைமையில் நடக்கிறது. சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி ராஜன் மலரை வெளியிடுகிறார். வரும், 26ம் தேதி நடக்கும் விழாவில், வேளாண் முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி, வேளாண்மைத் துறை இணை செயலாளர் ராஜேந்திரன், காவல் துறை உதவி ஆணையாளர் உமா சங்கர், எம்.எல்.ஏ., விஜய் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை, மகாதேவி ரேணுகாம்பாள் கோவில் தலைவர் பத்மாவதி சச்சிதானந்தம், பொதுச் செயலாளர் கன்னியப்பன் செய்து வருகின்றனர்.