உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில் சனிவார பூஜை

கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில் சனிவார பூஜை

ரெட்டியார்சத்திரம் : புரட்டாசி முதல் சனிவாரத்தை முன்னிட்டு, கொத்தப்புள்ளி கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக செங்கமலவள்ளி சமேத பெருமாள், மூலஸ்தான சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகம் நடந்தது. துளசி, மலர் சாத்துப்படி நடந்தது. சந்தனக்காப்பு அலங்காரத்துடன், விசேஷ பூஜைகள் நடந்தது. உற்சவருக்கு அபிஷேக, ஆராதனைகளுடன் ஏகாந்த சேவை நடந்தது.வீர ஆஞ்சநேயருக்கு சந்தனக்காப்பு அலங்காரத்துடன், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !