ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் கோயிலில் திருக்கல்யாணம்!
ADDED :3667 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்ஸவ 6ம் நாளை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. இக் கோயில் புரட்டாசி பிரம்மோற்ஸவ விழா கடந்த செப்.,16ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 6ம் நாளன நேற்று மாலை வடபத்ரசயனர், பூமாதேவி, ஸ்ரீதேவி திருக்கல்யாணம் வானமாமலை மடத்தில் நடந்தது. பத்ரிநாராயண பட்டர், பாலாஜி பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தனர். திரளான பக்தர்கள் தரிசித்தனர். இரவு யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. இன்று மாலை 3 மணிக்குமேல் தெற்குமாடதெரு, குப்பனையங்கார் மண்டபத்தில் பெரியபெருமாள் சயனசேவை நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராமாராஜா தலைமையில் அலுவலர்கள் செய்திருந்தனர்.