திண்டுக்கல், பழநியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்!
பழநி: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திண்டுக்கல், பழநியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த ஊர்வலத்திற்கு தலைவர் அர்ஜூன்சம்பத் தலைமை வகித்தார். பஸ் ஸ்டாண்டில் துவங்கி @காட்டை குளம் வரை சென்று கரைக்கப்பட்டது. இதில் மாநில பொதுச் செயலாளர் ராமன் ரவிக்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ@காபால் பங்@கற்றனர். பழநி: பாதவிநாயகர் கோயிலில் துவங்கிய ஊர்வலம் பெரியநாயகியம்மன் கோயில் தேரடி தெப்பம் வரை சென்றது. பின் சண்முகநதியில் விநாயகர் சிலைகள் கரைக்க
பட்டது.
சிவசேனா திண்டுக்கல் மாவட்ட தலைவர் அசோக்பாபு, செயலாளர் கனிவளவன், இளைஞரணி தலைவர் ஸ்ரீதர் பங்கேற்றனர். எஸ்.பி., சரவணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முஸ்லிம்கள் வரவேற்பு: சிவசேனா சார்பில் பஸ் ஸ்டாண்ட், காந்திமார்க்கெட் அருகே விநாயகர்சிலை ஊர்வலம் வரும்போது, பழநி மதனிசா முஸ்லிம் தர்மபரிபாலன சங்க முன்னாள் செயலாளர் சாகுல்அமீது குழுவினர் சிவசேனா நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்தனர். இதேபோல அவர்களுக்கும் சிவசேனா சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டது. வடமதுரை: இந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த ஊர்வலம் அய்யலுõரில் துவங்கி திண்டுக்கல் கோட்டை குளம் வரை சென்றது. ஏற்பாட்டினை மாவட்ட செயலாளர் சதீஸ், ஒன்றிய செயலாளர் பூமிநாதன், இளைஞரணி செயலாளர் நாகராஜ்,வடமதுரை நகர செயலாளர் சக்திவேல் செய்திருந்தனர். வேடசந்துõர்: இந்து முன்னணி சார்பில், ஆண்கள் மேல்நிலை பள்ளி முன்பு துவங்கிய ஊர்வலம் அழகாபுரி அணை பகுதியில் கரைக்கப்பட்டன. செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர் அ#யப்பன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் பால்பாண்டி, ஒன்றிய பொது செயலாளர் செல்வக்குமார் பங்கேற்றனர்.