பரமக்குடியில் கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம்!
ADDED :3668 days ago
பரமக்குடி: பரமக்குடியில் யாதவர் வர்த்தகர் சங்கம் மற்றும் யாதவ பொதுமக்கள் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா ஊர்வலம் நடந்தது. பெருமாள் கோயில் அர்ச்சகர் சத்யா தலைமையில் பொங்கல் விழா, திருவிளக்கு வழிபாடு நடந்தது. அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தினர் கிருஷ்ண நாம சங்கீர்த்தன பஜனையுடன் கிருஷ்ணர் யானை வாகனத்தில் வீதிவலம் வந்தார். வர்த்தகர் சங்க தலைவர் ராமு, செயலாளர் கண்ணன், பொருளாளர் கோபிநாதன், துணைதலைவர் கனகராஜ் உட்பட யாதவர் சங்கம், பண்பாட்டு கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.