சாமிப்பேட்டை விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்!
ADDED :3668 days ago
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த சாமிப்பேட்டை விநாயகர் கோவிலில், வரும் 24ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. விழுப்புரம் அடுத்த சாமிப்÷ பட்டையிலுள்ள விநாயகர், முருகன், அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில்களுக்கு, வரும் 24ம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு, இன்று மாலை 5:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், யாகசாலை அலங்காரம் நடக்கிறது, நாளை (23ம் தேதி) காலை 9:00 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜை, ராஜகோபுர புதிய கலசங்கள் கரிகோல நிகழ்ச்சி நடக்கிறது. இதனை தொடர்ந்து 24ம் தேதி காலை 10:00 மணி முதல் 10:15 மணி வரை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.