பக்ரீத்தை முன்னிட்டு சென்னை வந்தன ஒட்டகங்கள்!
ADDED :3771 days ago
சென்னை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, குர்பானிக்காக, ஒட்டகங்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இஸ்லாமியரின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத், வரும், ௨௪ம் தேதி கொண்டாடப்படுகிறது.பக்ரீத்தில், இறைச்சியை அனைவருக்கும் பங்கிட்டு கொடுக்கும் சடங்கு கடைபிடிக்கப்படும். அந்த சடங்கிற்கு, குர்பானி என்று பெயர். இஸ்லாமியர்களில் வசதி படைத்தோர், ஒட்டகங்களை வாங்கி, இறைச்சியாக்கி அவற்றை, ஏழைகளுக்கு தானமாக கொடுத்து வருகின்றனர். அதை முன்னிட்டு, ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஒட்டகங்கள், ஆந்திர மாநிலம் கடப்பா வழியாக, சென்னைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. ஒரு ஒட்டகத்தின் விலை, 55 ஆயிரம் ரூபாய். ஏழு பேர் சேர்ந்து ஒரு ஒட்டகத்தை வாங்கி பங்கிடுவர்.