கொந்த கருணை அப்பா தர்காவில் கந்தூரி விழா
ADDED :3665 days ago
கீழக்கரை: கீழக்கரை வடக்குத்தெருவில் உள்ள கொந்த கருணை அப்பா தர்காவில் கடந்த செப்., 18 மாலை 5.30 மணிக்கு கந்தூரி விழா கொடயேற்றம் நடந்தது. தொடர்ந்து 10 நாட்கள் இரவு மவுலீது எனும் புகழ்மாலை ஓதப்படுகிறது. வரும் செப்.,27 ல் அடக்கஸ்தலத்தில் சந்தனம் பூசப்பட்டு பச்சை போர்வை போர்த்தப்படும். அனைத்து சமுதாய மக்களும் திரளாக பங்கேற்று வருகின்றனர். விழா ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டி முகம்மது அப்துல் மஜ்ஜித் மற்றும் வடக்குத்தெரு ஜமாஅத் நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.