உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவந்திபுரம் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்!

திருவந்திபுரம் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்!

கடலுார்: கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது.  கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் மகா தேசிகர் சுவாமி பிரம்மோற்சவ விழா கடந்த 14ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.  முதல் நாள் காலை தேவநாத சுவாமி கண்ணாடி அறை திருமஞ்சனமும், இரவு 8:00 மணிக்கு கண்ணாடி அறை உற்சவமும், தேசிகர் சுவாமிக்கு பிரம் மோற்சவ அங்குரார்ப்பணம் நடந்தது.  தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது. ÷ நற்று முன்தினம் காலை தங்க பல்லக்கில் பேட்டை உற்சவமும், இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் வீதியுலாவும் நடந்தது. முக்கிய விழாவான தே÷ ராட்டம் நேற்று நடைபெற்றது.

அதனையொட்டி நேற்று விடியற்காலை சிறப்பு திருமஞ்சனமும், தொடர்ந்து காலை 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் தேசிகர், அலங்கரிக்கப் பட்ட தேரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் தோளுக்கினியால் மாளிகைக்கும், அங்கிருந்து இரவு சன்னதிக்கு எழுந்தரு ளினார்.  தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று ரத்தினாங்கி சேவையைத் தொடர்ந்து காலை 7:30 மணிக்கு திருமலையில் ஹய க்கிரீவர் மங்களாசாசனமும், 9:00 மணிக்கு பிற சன்னதிகளில் மங்களாசாசனமும், பகல் 2:30 மணிக்கு வீதி உற்சவம் மற்றும் தீர்த்தவாரியும், ஹேமாம்மபுஜநாயகி சமேத தேவநாத சுவாமி தேசிகர் சன்னதிக்கு எழுந்தருளி சாற்றுமுறை மற்றும் கண்ணாடி பல்லக்கில் வீதியுலா நடக்கிறது.   நாளை (25ம் தேதி) காலை தங்க பல்லக்கில் வீதியுலாவும், இரவு தெப்பல் உற்சவமும் நடக்கிறது. தொடர்ந்து 26ம் தேதி காலை 6:00 மணிக்கு சுவாமி  இந்திர விமானத்தில் வீதியுலாவும், இரவு விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவுறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !