ஆத்திசூடி நூல் மட்டுமல்ல!
ADDED :3802 days ago
அவ்வையார் எழுதிய நூல் ஆத்திசூடி. இது சிவனுடைய பெயர்களில் ஒன்றாகும். சிவன் தலையில் பிறைச்சந்திரன், கங்கை, நாகம் ஆகியவற்றை சூடியிருப்பதோடு கொன்றைப் பூவையும், ஆத்திமலரையும் சூடியிருப்பார். ஆத்திப்பூ, இளம் மஞ்சள் நிறத்தில் பிறைச் சந்திரனைப் போல இருக்கும். இதனை வடமொழியில் அகஸ்தி என்று குறிப்பிடுவர். அதுவே அகத்திப்பூ ஆகி ஆத்திப்பூ என்றாகி விட்டது. ஆத்திசூடியில் வரும் கடவுள்வாழ்த்துப் பாடல் சிவனைப் பற்றியதாகும்.