உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் கோயில் தேரோட்டம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் கோயில் தேரோட்டம்!

ஸ்ரீவில்லிபுத்தூர்: புரட்டாசி பிரம்மோற்ஸவ விழாவை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் கோயிலில் செப்பு தேரோட்டம் நடந்தது. இக் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. 9 வது நாளான நேற்று காலை 8.30 மணிக்கு செப்புதேரோட்டம் நடந்தது. பெரியபெருமாள், பூமாதேவி, ஸ்ரீதேவி திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பத்ரிநாராயண பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார். செயல்அலுவலர் ராமராஜா, ஸ்ரீவி.டி.எஸ்.பி., முரளிதரன் மற்றும் பக்தர்கள் தேர் வடம்பிடித்து இழுத்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !