உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெங்கடரமண ஸ்வாமி கோவில் புரட்டாசி திருவிழா தேரோட்டம்!

வெங்கடரமண ஸ்வாமி கோவில் புரட்டாசி திருவிழா தேரோட்டம்!

கரூர்: கல்யாண வெங்கடரமண ஸ்வாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. கரூர் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கடரமண ஸ்வாமி கோவில், தான்தோன்றிமலையில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் தேரோட்ட விழா சிறப்பாக நடந்து வருகிறது. நடப்பாண்டு கடந்த, 16ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, 19ம் தேதி வெள்ளி கருடசேவையும், 22ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதில், பக்தர்கள் பங்கேற்று, வடம் பிடித்து தேர் இழுத்தனர். வரும், 28ம் தேதி கருடசேவையும், 5ம் தேதி முத்து பல்லக்கு, 6ம் தேதி ஆளும் பல்லக்கு, 7ம் தேதி புஷ்ப யாகமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !