அங்காளம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த சாமிப்பேட்டை கிராமத்தில் உள்ள விநாயகர், முருகன், அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, கடந்த 22ம் தேதி மாலை விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை, யாக சாலை அலங்காரம், முதல் கால யாக பூஜை நடந்தது. பின், 23ம் தேதி காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, ராஜகோபுர புதிய கலசங்கள் கரிகோலம் வருதல், கலச பிரதிஷ்டை, மூன்றாம் கால யாகசாலை பூஜை, மஹா பூர்ணாஹூதி நடந்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம் அதிகாலை 5:55 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, நாடிசந்தனம், காலை 9:30 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. காலை 10:00 மணிக்கு ராஜகோபுரம், மூலவர் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு சிவாச்சாரியார்கள் சுப்ரமணியன், கணேசன் ஆகியோர் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தினர். விழா ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் வெங்க டேசன் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.