திருவண்ணாமலை நாராயபெருமாள் கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :3667 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கண்ணமங்கலம் அருகே, அழகு சேனை கிராமத்தில், நாராயபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கண்ணமங்கலம் அடுத்த, அழகுசேனை கிராமத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீதுளசி கண்ணநாராய பெருமாள் கோவில் உள்ளது. கோவில் புனரமைக்கப்பட்டு நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.இதில், ஏராளமான பக்தர்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.