உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிந்தராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவ விழா

கோவிந்தராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவ விழா

உடுமலை: ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜ பெருமாளுக்கு, திருக்கல்யாண உற்சவம், உடுமலையில் நாளை நடக்கிறது. உடுமலை பிராமண மகா சங்கம், உபாசனா சார்பில் நடக்கும் இந்நிகழ்ச்சி, வ.உ.சி., வீதியில் உள்ள, ராமய்யர் திருமண மண்டபத்தில், நாளை காலை, 7:30 மணிக்கு, துவங்குகிறது. காலை, 9:00 மணிக்கு, இசைப் பள்ளி மாணவர்களின் இசை நிகழ்ச்சியும், 10:00 மணிக்கு, நாட்டிய நிகழ்ச்சியும் நடக்கின்றன. காலை, 10:30 மணி முதல் மதியம், 12:30 மணி வரை, ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மதியம், 12:30 மணி முதல், 1:00 மணி வரை, அன்னக்கூடை உற்சவம், தீபாராதனை போன்றவை இடம்பெறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !