பழநி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
ADDED :3722 days ago
பழநி: பிரதோஷத்தை முன்னிட்டு பழநி இடும்பன்கோயில், பெரியாவுடையார் சிவன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்து. பிரதோஷத்தை முன்னிட்டு பழநி பை-பாஸ் ரோடு இடும்பன் கோயிலில் சிவகிரிநாதர், உமாமகேஸ்வரி, நந்திபகவானுக்கு பால், பன்னீர், பழங்கள் உள்ளிட்டபொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாரதனை நடந்தது. பெரியநாயகி யம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிவன், பார்வதி ரிஷபவாகனத்தில் திருவுலா வந்தனர். சண்முகநதி பெரியாவுடையார் சிவன்கோயில், புதுநகர் சிவன்கோயில், ஆயக்குடி சோழீஸ்வரர் கோயில், திருஆவினன்குடிகோயில் உள்ளிட்ட சிவன்கோயில் நந்திபகவான், சிவன், பார்வதிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.