திண்டிவனம் கோவிலில் ஆன்மிக சொற்பொழிவு
ADDED :3669 days ago
திண்டிவனம்: திண்டிவனம் ரத்தின விநாயகர் கோவிலில், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. திண்டிவனம் கிருஷ்ணப்பிள்ளை வீதியில்(நகை கடைத் தெரு) உள்ள ரத்தின விநாயகருக்கு, கடந்த 16ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றது. கடந்த 23ம் தேதி " வினை தீர்க்கும் ரத்தின விநாயகர் என்ற தலைப்பில் கலைமாமணி தேச மங்கையர்க்கரசி பங்கேற்ற ஆன்மிக சொற்பொழிவு நடந்தது . விழா ஏற்பாடுகளை, திண்டிவனம் ஜூவல்லர்ஸ், பான்புரோக்கர் சங்கத்தின் நிர்வாகிகள் சஞ்சீவிகுப்தா, ராம்லால்ரமேஷ், பாபு, சந்திரசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.