உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கராபுரம் பெருமாள் கோவிலில் சிறப்பு ஆராதனை!

சங்கராபுரம் பெருமாள் கோவிலில் சிறப்பு ஆராதனை!

சங்கராபுரம்: சங்கராபுரம் பெருமாள் கோவிலில் புரட்டாசி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையை  முன்னிட்டு, சங்கராபுரம் ஆற்றுப்பாதை தெருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து  ஆராதனைகள் மற்றும் அலங்காரம்   நடந்தது. மகா தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து  கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் முனியப்ப செட்டியார் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !