ஈஸ்வரர் கோவிலில் 30ம் தேதி குரு பூஜை
ADDED :3671 days ago
புதுச்சேரி: குரு வேலாயுத ஈஸ்வரர் கோவிலில், வரும் 30ம் தேதி குரு பூஜை விழா நடக்கிறது. புதுச்சேரி வசந்த் நகரில் உள்ள குரு வேலாயுத ஈஸ்வரர் கோவில் குரு பூஜை விழா வரும் 30ம் தேதி காலை 10:30 மணிக்கு கணபதி பூஜையுடன் துவங்குகிறது. 11:00 மணிக்கு தேவாரம் படித்தல், 11:30 மணிக்கு புனித கங்கை நீரில் மகா அபிேஷகம் மற்றும் ஆராதனை நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு அன்னதானமும், மாலை 4:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை வேலாயுத ஈஸ்வரர் கோவில் விழா குழுவினர், அரவிந்தர் வீதி வேதானந்த மடத்தினர் செய்து வருகின்றனர்.