ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் கோயிலில் புரட்டாசி புஷ்பயாகம்!
ADDED :3681 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் கோயிலில் புஷ்பயாகம் நடந்தது. இக்கோயில் புரட்டாசி பிரம்மோற்ஸவ விழா கடந்த செப்.,16ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நிறைவு நாளான நேற்று மாலை 5.30 மணிக்கு கோபாலவிலாசத்தில் புஷ்பயாகம் நடந்தது. பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகள் செய்து, பல்வேறு வகையான மலர்களால் புஷ்பயாகம் நடந்தது.ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராமராஜா தலைமையில் அலுவலர்கள் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.