மதிக்கிருஷ்ணாபுரம் கோவிலில் 3ம் தேதி சிறப்பு திருமஞ்சனம் !
ADDED :3677 days ago
பாகூர்: மதிக்கிருஷ்ணாபுரம் பட்டாபிராமர் கோவிலில், புரட்டாசி மாத 3வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. பாகூர் அடுத்துள்ள மதிக்கிருஷ்ணாபுரம் பட்டாபிராமர் கோவிலில் புரட்டாசி மாத 3வது சனிக்கிழமையையொட்டி வரும் 3ம் தேதி, சுவாமிக்கு சிறப்பு தி ருமஞ்சனம் நடக்கிறது. காலை 8.00 மணிக்கு பட்டாபிராமருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. காலை 10.00 மணிக்கு கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 6.00 மணிக்கு திருவந்திபுரம் பட்டாபிராமர் பஜனை குழுவினரின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8.00 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.