புதுச்சேரி கோவில்களில் பூஜைக்கு நிதியுதவி வழங்கல்!
ADDED :3676 days ago
புதுச்சேரி: நெல்லித்தோப்பு தொகுதியில் ஐந்து கோவில்களுக்கு அற நிலையத்துறை மூலம் ஒரு கால பூஜைக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. நெல்லி த்தோப்பு தொகுதி பெரியார் நகர் பெரியநாயகி அம்மாள், கஸ்துாரிபாய் நகர் ஆதிமுத்துமாரியம்மன், தோட்டக் கால் தும்புலிமாரியம்மன், பகத்சிங் வீதி முத்துமாரியம்மன், டி.ஆர்.நகர் பச்சைவாழியம்மன் கோவில்களுக்கு அறநிலையத் துறை மூலம் ஒரு கால பூஜைக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இக்கோவில் நிர்வாகிகளிடம் ரூ.௧ லட்சத்து ௧,௨௫௭ ரூபாய்க்கான காசோலையை ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ., வழங்கினார்.