திருமலை ஏழுமலையப்பன் பணக்காரசாமி ஆனது எப்படி?
ADDED :4033 days ago
திருமலையில் தினமும் தங்கம், வைரம், பணம் காணிக்கைகள் மழைபோல் கொட்டுகிறது. மற்ற கோயில்களில் இல்லாத அளவுக்கு இங்கு மட்டும் எப்படி பணம் கொட்டுகிறது. அதற்கு ஆதிசங்கரர் தான் காரணம் என்று சொல்கிறார்கள். ஆதிசங்கரர் ஒரு தடவை திருமலைக்கு சென்றிருந்தார். அ ப்போது தன்னிடம் இருந்த தன ஆதர்ஷண எந்திரம் ஒன்றை கருவறை பீடத்தில் பொருத்தினார். அன்று முதல் திருப்பதியில் காணிக்கை பணம் கொட்டுவதாக சொல்லப்படுகிறது.