வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்!
ADDED :3685 days ago
பரங்கிப்பேட்டை: புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையையொட்டி நேற்று பரங்கிப்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பரங்கிப்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையையொட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மூலவர் திருப்பதி சீனிவாச பெருமாள், அலங்காரத்திலும், உற்சவமூர்த்தி, பார்கடல் வாசன் என்ற சிறப்பு அலங்காரத்திலும் அருள்பாலித்தார். தொடர்ந்து நவராத்திரி முழுவதும் சிறப்பு பூஜை நடக்கிறது. 10ம் நாள் குதிரை வாகனத்தில் அம்புபோட்டு வீதியுலா நடக்கிறது. பரங்கிப்பேட்டையைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், கோவில் பரம்பரை டிரஸ்டி வரதராஜ பட்டாச்சாரியார் செய்திருந்தனர்.